Sunday, November 18, 2018

ஈழ தேசம் முழுவதையும் ஆண்ட தமிழ் மாமன்னன் எல்லாளனின் சமாதி எங்கே?!



இனிய காலை வணக்கங்கள்.

74 வயதான எல்லாளனை
துரோகத்தால் வீழ்திய 16
வயதே ஆன துட்டகைமுனுவினால்
எல்லாளனுக்காக அமைக்கப்பட்ட
 "தக்கன விகாரை"தமிழர்களிடம்
இருந்து பறி போய்விட்டது!
வேதனை!!

பிறப்பு:கி.மு 235
இறப்பு:கி.மு 161

   
       
   
  எல்லாளன் ஈழ தேசத்தை கி.மு 205 ஆண்டு முதல் கி.மு 161-ம் ஆண்டுவரை ஆண்ட தமிழ் சோழ மாமனன்....

ஈழத்தை 44 ஆண்டுகள் மிக நீணட காலமாக ஆட்சி செய்த மன்னன் எல்லாளன்.நீதி தவறாமல் ஆட்சி செய்த மறவன்.கி.மு 205-ல் இருந்து கி.மு 161-வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவன் தனது அமச்சரவையில் சிங்கள பரதானிகளுக்கு கூட உரிமை வழங்கினான் என்கிறது வரலாறு.இத்தனை பெருமைகளைக் கொண்ட தமிழ் மன்னனுடைய  கல்லரை அடையாளம் இழந்து அல்லது மறைக்கப்பட்டு தமிழர்களுக்கு சொந்தம் இல்லாமல் போய்விட்டது என்பது வரலாற்று வேதனை.

அனுராதபுரத்தில் இருந்து தெற்கே 11 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது "தக்கன விகாரை".இதன் அண்மையில் 'துட்டகைமுனு'வின் கல்லரை அமைந்துள்ளதாக வரலாறுகள்,நூல்கள் சான்றுகள் கூறுகின்றன.

ஆனால்,இது உண்மை இல்லை என்று உறுதியாக சொல்கிறார்கள்.வரலாற்று ஆய்வாளர்கள்.

கி.மு 2-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் 74-வயதாக எல்லாளனுக்கும் 16 வயதே ஆன துட்டகைமுனுவிற்கும் அனுராதபுரம் தக்கன விகாரைக்கு அண்மையில் போர் நடக்கிறது.போரில் துரோகத்தன மாகஎல்லாளன் நயவஞ்சமாக கொல்லப்படுகிறான்.எல்லாளனை கொன்ற துட்டகைமுனு அவனை கௌரவிப்பதற்காக அதே இடத்தில் அவனை புதைத்து,அங்கேயே ஒரு நினைவு தூபியையும் அமைத்து கல்வெட்டு ஒன்றையும் செதுக்கினான்.

1900 ஆண்டுகாலப் பகுதிவரை எல்லாள மன்னனுடைய நினைவுத் தூபியானது மக்களால் மரியாதை செய்யப்பட்டு வந்தது என பல வரலாற்று ஆதாரங்கள் பகிர்வு செய்கின்றன.
   
       
   
  எல்லாள மன்னனுடைய நினைவு தூபியானது அவன் இறந்த இடத்தில் கட்டப்பட்டு கி.பி 6-ம் நூற்றாண்டு வரைக்கும் அனைத்து மக் களாலும் மரியாதை செலுத்தப்பட்டு வந்ததாகவும்,அதனை கண்கூட கண்டதாகவும் மகா வம்சத்தின் எழுத்தாளர் 'மகாநாம'தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.அதுமட்டுமின்றி கி.பி 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'சத்தர்மலங்காரய'என்னும் நூலில் எல்லாளன் புதைக்கப்பட்ட இடத்தில் எல்லாளன் பெயருடன் விளங்கிய நினைவுத் தூபி துட்டகைமுனு கட்டுவித்தான் என திட்டவடடமாக உறுதியாக கூறுகிறது.

1818-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின் போது,கண்டி இராச்சியத்தின் பிரதானி பிலிமத்தலாவிற்கு தப்பித்து ஓடிக் கொண்டிருக்கையில் எல்லாளன் நினைவுத் தூபியை கடக்கும் போது,தனது சிவிகையில் இருந்து கீழ் இறங்கி மரியாதை செலுத்தினான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இத்தனை வரலாற்று சான்றுகளும்,வரலாற்று ஆசிரியர்கள் கூறிய கருத்துக்கள் பொய் என நிரூபிக்கப்பட்டது என்று கூறினால் நம்ப முடிகிறதா?!.....

நம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்!ஏன் உலகத் தமிழர்கள் கூட....!!மண் மேடாக இருந்த எல்லாளனுடைய தூபி கல்வெட்டு என்பனவற்றை மறைக்க முயன்றதோடு ,அவை துட்டகைமுனுவின் தூபி என 1946-ம் ஆண்டு பரணவிதாரன தனது ஆண்டறிக்கையில் தெரிவித்ததையடுத்து எல்லாளனின் கல்லரையில் துட்டகைமுனுவின் கல்லரை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது எந்தவொரு அகழ்வாராச்சி மற்றும் சர்வதேச வரலாற்று ஆய்வாளர்களின்  சோதனைகள் இல்லாமலேயே என்பது வேதனை என்பதைவிட,துட்டகைமுனு இருந்திருந்தால் அவனே தலைகுனிந்து வெட்கப்பட்டிருப்பான் இந்த பௌத்த சிங்கள ஆக்கிரமிபபாளர்களின் அநாகரிக செயலை எண்ணி வேதனைப்பட்டிருப்பான்.

மகா வம்சத்தின் கருத்துப்படி சமய சடங்குகள் நிகழ்த்தப்படும் பிரதேசம் "மாலக்க"என்று அந்தக் காலத்தில் அழைக்கப்படும்.துட்டகைமுனு தனது இறுதி ஆங்கையில் மகாவிகாரை வளவிற்குள் தன் உடலை தகனம் செய்யுமாறு கேட்டுக் கொண்டான் எனவும்,துட்டகைமுனுவின் உடல் இங்கு தகனம் செய்யப்பட்டதால் இப்புனித பிரதேசம் 'நிமிச மாலக்க'என மாறியதாகவும் மகாவம்சம் கூறுகிறது.மகாவம்சத்தை மொழி பெயர்த்த கைகர் நிசம மலாக்க என்பவர் அரசனின் உடல் மகாவிகாரைக்கு வெளியே உள்ள மாலக்கவில் தகனம் செய்யப்பட்டது என்று மொழி பெயர்த்தார்.

இதற்குரிய சரியான மொழி பெயர்ப்பை அபய ஆரியசிங்க என்பவர்  பிற்காலத்தில் வெளியிட்டார்.சரியான மொழி பெயர்ப்பின் படி நிசிம மாலக்க என்பது வழக்கமாக ஏற்றுக்.கொணட சடங்குகளுக்கு பொருத்தமில்லாத இடமாகும்.
   
       
   
  எனவே,பரணவிதாரவின் தவறான நயவஞ்ச மொழி பெயர்ப்பால் எல்லாளனின் சமாதியை துட்டகைமுனுவின் சமாதி என பிழையான முடிவை எடுத்துரைத்து விட்டார்.

அத்தோடு நின்று விடாது,துட்டகைமுனுவின் பெறாமகனான 'வலகம்பா'மன்னனே தக்கன தூபியை கட்டினான்.இது துட்டகைமுனுவின் சமாதி மீது கட்டப்பட்டது என்ற ஒரு கற்பனையை வெளியிட்டார்.இதற்கு எந்தவொரு வரலாற்று சான்றுகளும் இல்லை.தக்கன தூபியானது எல்லாளனின் கல்லரைக்கு அண்மையில் கட்டப்பட்டது என்ற மகாவம்சம் கூறுகிறது.ஆனால்,துட்டகைமுனுவின் தூபி என குறிப்பிடப்படவில்லை.அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

மகாவம்சத்தி்ன் காவிய நாயகனாக துட்டகைமுனுவின் சமாதியக தக்கன தூபி இருந்திருந்தால் கட்டாயம் இது தொடர்பில் மகாவம்சத்தில் குறிப்பிடபபட்டிருக்கும் என்பது சீட்டிக்காட்டத்தக்கது.

தமிழ் வீரதர்மத்தோடு நாட்டை ஆண்ட மன்னனுடைய நினைவுத்தூபி இரண்டு சதாப்பங்களாக தாண்டி மரியாதை செலுத்தப்பட்ட மரபு ஒருவரின் ஒருபக்க நயவஞசக பிழையினால் தமிழர்களின் கையிலிருந்து பறி போனது என்பது நவஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு பறிக்கப்பட்டது என்று கூறுவதே பொருந்தும்!!

தமிழர்களின் எதிர்கால சந்ததியினர் மறந்திடக்கூடாத,தமிழர்களின் மாமன்னன் எல்லாளனின் சமாதிதான் இந்த "தக்கன விகாரை"என்பதை இப்பவே,உங்களுடைய பிள்ளைகளுக்கு எடுத்துரையுங்கள்.அவனுடைய வரலாற்றை போதியுங்கள்.எதிர்காலத்தில்,தமிழ் வீரன் ஒருவன் மீண்டு(ம்)நம் எல்வாள மாமன்னனுடைய சமாதியை பெற்று தருவான் என்ற நம்பிக்கையே மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுத் தரும்....

அன்புடன்....









0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

wintamila