நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, November 17, 2018

நொடிப்பொழுதில் உயிரைப் பறிக்கும் இதயநோய்... வராமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்!


நாம் சாப்பிட கூடிய ஒவ்வொரு உணவுகளுக்கு பின்னும் பல வித அறிவியல் பூர்வ தன்மைகள் உள்ளன. ஒரு சில உணவுகள் உடலுக்கு நன்மையை தர கூடிவையாக இருக்கும். ஒரு சில உணவுகள் உடல் நலத்தை கெடுப்பவையாக இருக்கும். இவற்றில் உடல் நலத்திற்கு நன்மை தர கூடிய உணவுகளில் இந்த பாதாமும் அடங்கும்.

   
       
   
 

நீங்கள் தினமும் வெறும் 4 பாதாம் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கும். அத்துடன் பல வகையான வியாதிகளில் இருந்தும் இவை விடுவிக்க செய்யும். தினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதை இந்த பதிவில் அறிவோம்.

கொலஸ்ட்ரால் குறைய

தினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் முதல் பயன் உங்களின் கொலஸ்ட்ரால் குறைவதே. குறிப்பாக ரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இவை குறைய வைக்கிறது. மேலும், உடல் பருமனையும் கூடாமலும் இந்த பாதாம் பார்த்து கொள்கிறது.

பச்சையாகவா..? வருத்ததா..?

பாதாமில் எது சிறந்தது என்பதே பலரின் கேள்வியாக இருக்கும். குறிப்பாக பாதாமை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு அதிக நலனை தருமா..? அல்லது வறுத்து சாப்பிட்டால் அதிக பலனை தருமா..? என்பது பலரின் கேள்வியாக உள்ளது. உண்மையில் பாதாமை அப்படியே வறுத்த பாதாமை விட பச்சையாக சாப்பிட்டால் அதிக பயன்கள் கிடைக்குமாம். மேலும், நீரில் ஊற வைத்த பாதாமையும் சாப்பிடுவது சிறந்தது.

இதய பாதுகாப்பிற்கு

ஆரோக்கியமான இதயம் வேண்டுமென்றால் அதற்கு ஏராளமான வித்தைகளை எல்லாம் செய்ய வேண்டியதில்லை. மாறாக 4 பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால் நன்று. பாதாமில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், மெக்னீசியம், காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டத்தை வைத்து, இதய நோய்களில் இருந்து காக்கும்.

ஏன் தினமும் 4 பாதாம்..?

தினமும் 4 பாதாம் ஏன் சாப்பிட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் பாதாமில் பலவித ஊட்டச்சத்துக்களும் தாது பொருட்களும் நிறைந்துள்ளது தான். குறிப்பாக வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம், மக்னேசியம், பாஸ்பரஸ் என ஏராளமான சத்துக்கள் உள்ளன.

   
       
   
 

அளவுக்கு முக்கியம்..!

எப்போதும் எந்த ஒரு உணவை சாப்பிட்டாலும் அதற்கென்று போதுமான அளவு இருக்க வேண்டும். சுவையாக இருக்கிறது என்று சாப்பிட்டு கொண்டே இருந்தால் பிறகு ஆபத்து நமக்கு தான் ஏற்படும். எனவே, வெறும் தினமும் 4 பாதாம் சாப்பிடுவதே சிறந்தது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!