Tuesday, November 27, 2018

உங்கள் வீட்டில் பணம் தங்காது என்பதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா?


நம்முடைய வீட்டில் எவ்வளவு தான் சேமித்து வைத்தாலும் செல்வம் தங்குவதில்லை அதிகளவில் வருத்தம் கொள்கிறோம்.ஆனால் அதற்கான தீர்வு நம்மிடமே தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதில்லை. முதலில் நம்மிடம் ஏன் பணம் தங்குவதில்லை, அதற்கான அறிகுறியையும், காரணத்தையும் பார்க்கலாம்.

ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது. 

ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சனையால் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது. 

அளவுக்கதிமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம். 

வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து விட்டால், அந்த குடும்பத்தினர் பணக்கஷ்டத்தை சந்திக்க நேரிடும். 

ஒருவரின் கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் உருவானால், அது அவர்களின் சேமிப்பு பணம் கரையத் தொடங்கும் என்று பொருள். 

வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஒருவர் நகைகளை இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் மறந்தால், அது பெரிய பண இழப்பை ஏற்படுத்த போவதாக அர்த்தம்.

இல்லங்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அதற்கு 10 எளிய வாஸ்து குறிப்புகள் உள்ளன.

உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை

சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.

ஒளிபிறந்தால் ஓடோடி வரும் செல்வம்

வீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை மாலை விளக்கேற்றி வைத்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.

மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம்

பூஜை அறையிலும் பிரதான அறையிலும் மங்களத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக், ஓம் குறிகளை இடுங்கள். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும்.

கண் திருஷ்டியைப் போக்கும் எலுமிச்சை

சனிதோறும் பூஜை செய்து ஒரு டம்ளரில் எலுமிச்சைப் பழத்தைப் போட்டு பூஜை அறையில் வைக்கவும். வாரந்தோறும் பூஜித்து புதிய பழத்தை வைக்கவும். இப்படி செய்தால் கண் திருஷ்டி உங்கள் இல்லத்தையும் உங்கள் குடும்பத்தாரையும் விலகி ஓடும்.

பூஜை அறையில் புனித கங்கை நீர்

புனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம் உண்டாகும்.

தீயசக்திகளை துரத்தும் உப்பு

வீட்டின் அறை மூலைகளில் சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிறைத்து வைக்கவும். தீய சக்திகளை அறவே கிரகித்து நீக்கும் தன்மை உப்புக்கு உள்ளது.

சரியான திக்கில் சமையலறை

வாஸ்துப்படி வீட்டில் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு முகமாக அடுப்பை வைத்திருக்கோமா என்பதை உறுதி செய்யுங்கள்.

சமையலறையில் மருந்துகள் வைத்தலாகாது

   
       
   
  எந்தவொரு தீயசக்தியும் சமையலறையை அண்டவிடக்கூடாது. இதற்கு முதல்படி நோய் நிவாரணிகளான மருந்துகள் சமையலறையில் வைக்கக்கூடாது. ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் இடமான சமையலறையில் மருந்துகளை வைத்திருப்பது ஆகாது.

படுக்கையறையில் தேவையில்லை முகம்பார்க்கும் கண்ணாடி

படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கக் கூடாது. சிலர் வீட்டில் டிரஸ்ஸிங் டேபிள் படுக்கையறையில் இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிடவும். வாஸ்துப்படி படுக்கையறையில் உள்ள கண்ணாடி பிணியையும் குடும்பத்தில் சச்சரவையும் ஈர்த்து வரும்

அமைதியைத் தூண்டும் மணியோசை

மணி அடுக்குகளை வீட்டில் தொங்கவிட்டால் தீய சக்திகளை தவிடு பொடியாக்கும். காற்றில் எப்போதும் நல்ல சக்தியை பரப்பும் தன்மை இந்த மணிகளுக்கு உண்டு.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன. அந்த மாதங்களையும், இந்த மாதத்தில் ஏன் புதுவீட்டிற்கு குடிபோககூடாது என்ற காரணத்தைப்பற்றியும் பார்க்கலாம்.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி

ஏன் போககூடாது என்பதை பார்க்கலாம்

இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது.

பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது.

இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது.
   
       
   
 

பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம்.

மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது.

மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது.

இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.

0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

tamil news tamil news ,
tamil news ,
sri lanka news ,
tamil ,
video ,
lankasri tamil news ,
jaffna news,
tamil cricket news ,
google tamil news ,
online shopping sri lanka