நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, November 23, 2018

அண்ணனின் சடலத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய தங்கை! நெஞ்சை உருக்கிய நிகழ்வு!


பிரித்தானியாவில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்துடன் அவரின் உயிருக்கு உயிரான தங்கை தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Liverpool-ஐ சேர்ந்தவர் கேரி கிறிஸ்டோலு (33). இவர் மூன்று வாரங்களுக்கு முன்னர் காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

   
       
   
 

பின்னர் கேரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அவர் தப்பிக்க முயன்ற போது மீண்டும் துப்பாக்கியால் சுட்டதில் கேரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த செய்தியை கேட்டு கேரியின் சகோதரி சோபியா (27) துடித்து போனார்.

கேரி இறந்த அன்று சோபியாவின் பிறந்தநாள் வந்த நிலையில் கேரியின் வீட்டுக்கு வந்த அவர் அண்ணனின் சடலத்துடன் அந்த நாளை கழித்தார்.

சோபியா கூறுகையில், எங்கள் இருவருக்குள் ஈடு இணையில்லாத அன்பும், பாச பிணைப்பும் உள்ளது. என் பிறந்தநாளன்று கேரி சடலத்துடன் இருந்தது மனதில் இருந்த வலியை நீக்கியது.

என் வாழ்க்கையில் செய்த சிறந்த விடயமாக இதை கருதுகிறேன். நாங்கள் ஒருவருக்கொருவர் பொய் பேசி கொண்டதே இல்லை, சண்டை போட்டு கொண்டதும் இல்லை.

   
       
   
 

கேரி போதை மருந்துகளை கடத்தும் வேலையை செய்து வந்தார் என சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் கேரியை சுட்ட வழக்கில் பொலிசார் நால்வரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கேரியின் இறுதிச்சடங்கு திங்கட்கிழமை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!