நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, November 25, 2018

கொலை செய்த அமெரிக்கர் உடலை காட்டுவாசிகள் என்ன செய்வார்கள் தெரியுமா?


சென்டினல் தீவு பழங்குடியினர், வெளிநபர்களைக் கொன்ற பின் அந்த உடல்களை என்ன செய்கின்றனர் என்பதை அறிய, விசாரணை அதிகாரி ஒருவர், மானுடவியல் ஆய்வாளர்களின் உதவியை நாடியுள்ளார்.

   
       
   
 

சென்டினல் தீவு வாசிகள், அங்கு வரும் வெளியாட்களை அம்பெய்து கொன்று வருகின்றனர். அவர்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில், அங்கு சென்ற அமெரிக்கர் ஜான் கொல்லப்பட்டார். 

தடைசெய்த தீவுக்கு அழைத்துச் சென்ற மீனவர்கள், ஜானின் சடலத்தை அவர்கள் புதைத்தபோது பார்த்ததாகக் கூறியுள்ளனர்.

அமெரிக்க தரப்பில் அவரின் உடலைக் கேட்டுள்ளதால், அந்தமான், நிக்கோபர் தீவுகளின் காவல் உயரதிகாரி தீபேந்திர பதக், அதை மீட்க திட்டமிட்டுள்ளார். 

ஆபத்தான தீவை அணுகுவது எப்படி?

   
       
   
  என இதேபோன்ற பணிக்காக 2 ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்ற கமேண்டோ பிரவீனிடம் கோப்புகளைக் கேட்டுள்ளார்.

மானுடவியலாளரின் தகவல்படி, அங்கு வருபவர்களை அச்சுறுத்தும் வகையில், சில நாட்களுக்குப் பின், வெளியாட்களின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதை மூங்கிலில் கட்டி, தீவுக் கரையில் நிறுத்தி எச்சரிப்பது அவர்களின் பாணியாக உள்ளது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!