Wednesday, November 7, 2018

டி.என்.ஏ பரிசோதனை செய்கிறீர்களா? பெரும் ஆபத்தாம் கவனம் மக்களே..! ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

  admin       Wednesday, November 7, 2018


பலர் தங்களுடைய வருங்காலத்தை பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் இருப்பர். அதில் ஒன்று ஜோதிடம் மற்றொன்று டி.என்.ஏ பரிசோதனை. டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் ஆபத்தாக உள்ளதா... ஏன்?


மரபணுவின் வரலாற்றை தெரிந்து கொள்ள பலரும் தேர்ந்தெடுக்கும் வழி டி.என்.ஏ பரிசோதனை. பொதுவாக டி.என்.ஏ பரிசோதனை செய்ய ஒரு டியூப்பில் எச்சிலை சேகரித்து கட்டணத்துடன் சேர்த்து அனுப்பினால் மட்டுமே போதும் அனைத்து தகவலும் கைக்கு வந்துவிடும்.

நமது தலை முதல் கால் வரை அனைத்தும் அறியப்படும்.

   
       
   
  நமக்கு பிடித்த உணவில் இருந்து பிடித்த நபர் வரை அனைத்தையும் அப்டேட் செய்துவிடும் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள். இதுவரை சோதனை செய்யப்பட்ட மரபணுக்களின் எண்ணிக்கை 25 லட்சத்திற்கும் குறைவு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அதன் மூலம் நமக்கு கிடைக்கும் தகவல் உண்மையா? அதனை மக்கள் ஏற்றுகொள்ளலாமா? இது போன்ற கேள்விகள் தற்போது எழுகின்றது.

ஆம், கடந்த 2003-ம் ஆண்டு மனித உயிரணுவில் 20 ஆயிரம் மரபணுக்கள் கொண்ட மரபணுக்கோப்பினை முழுவதுமாக ஆய்வு செய்து, அதிலுள்ள தகவல்களை சேகரித்து பதிவு செய்யும் "மரபணுக்கோப்பு திட்டம்" வெற்றியடைந்தது.

அத்திட்டம் வெற்றியடைந்ததால் மரபணு சோதனை செலவு குறைவோடு மிக வேகமாக ஆய்வு செய்ய முடிந்தது. சுலபமாக செய்ய முடிந்ததால் பலரும் இதனை வியாபாரமாக செய்ய ஆரம்பித்தனர்.

இதன் மூலம் கிடைக்க பெறும் மரபணு சோதனையின் தகவல் 40 சதவிகிதம் தவறாகவே உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது செய்து வரும் சோதனைகள் யாவும் முழுமையாக செய்யவில்லை. குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே ஆய்வு செய்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

ஒருவர் தரும் தகவல் உண்மையல்ல என்று இருந்தால் அதே மரபணுவை வைத்து மற்றொருவர் தரும் தகவல் உண்மையாக இருக்கும். இதனை எப்படி ஏற்று கொள்ள இயலும்?

   
       
   
  நமது எச்சில் மூலமாக பிரபல நிறுவனங்கள் தரும் பரிசோதனை முடிவுகள் மிக மிக குறைவானவை மிகவும் சிக்கலானவையும் கூட.

அதனால் நன்கு தெரிந்து கொண்டு அதனுடன் தொடர்புடைய ஆய்வுகள் மூலமாக உண்மையை உறுதி செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

logoblog

Thanks for reading டி.என்.ஏ பரிசோதனை செய்கிறீர்களா? பெரும் ஆபத்தாம் கவனம் மக்களே..! ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Previous
« Prev Post