நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, November 25, 2018

இதுவரை உலகில் உயிரோடிருப்பவர்கள் எவரும் அறியாதத சயனைடின் சுவை !
சயனைடு சாப்பிட்டால் எவ்வளவு நேரத்தில் மரணம் வரும்? 10வினாடிகளுக்குள் என்கிறார்கள்.

சயனைடின் நிறம்? வெண்ணிறப்பொடியாக இருக்கும்

சயனைடின் மணம்? பாதாம்போல் இருக்கும்

சயனைடின் சுவை? மில்லியன்டாலர் கேள்வி
அதன்சுவையை கண்டுபிடிக்க பலரும் முயன்றும் முடியவில்லை. இதன் சுவையை எப்படியாவது கண்டுபிடித்துவிடவேண்டும் என்று முயன்றார் ஒரு விஞ்ஞானி... அதற்காக மிகவும் எச்சரிக்கையுடன் முன்னேற்பாடுகளைப் பட்டியலிட்டார் அந்த விஞ்ஞானி.

பேப்பர்,பேனா, சயனைடு அனைத்தையும் ஒரு மேசையில் வைத்தார். சயனைடை நாக்கில் வைத்தவுடன் சுவையின் முதல் எழுத்தைப் பேப்பரில் எழுதிவிட வேண்டும் என்பது அவரது இலக்கு.

அதற்கு ஒரு ஐடியா.. "S " என்றால் இனிப்பு ,"B" என்றால் கசப்பு, "T" என்றால் புளிப்பு என்று முடிவுசெய்தார். இதை கண்டுபிடித்துவிட்டால் உலகில் முதன்முதலில் சயனைடின் சுவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமையும்,பெயரும் கிடைக்கும். ஆனால் உயிர் போய்விடும்.

அதற்குத் துணிந்த அவர்... மருத்துவர்களுக்கும் காவல்துறைக்கும் தெரிவித்துவிட்டு ஒரு கையில் மிகக் குறைவான சயனைடு தூளையும் இன்னொரு கையில் பேனாவையும் வைத்துக்கொண்டு நாக்கில் சயனைடை வைத்தார்...

விஞ்ஞானி தன் சோதனையை முடித்துவிட்டார்.

ஆனால்.... நாக்கில் வைத்த மறு வினாடியே அவரது நாடித்துடிப்பு அடங்கிப் போனது. அவரும் உயிருடன் இல்லை. மேசையிலிருந்த தாளிலும் ஒன்றும் எழுதப்படவில்லை.

உயிரைப் பணயம் வைத்து முயற்சித்தும் கேள்விக்கான விடை இன்னும் கிடைத்தபாடில்லை. சயனைடே வெற்றி கொண்டது!
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!