நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, November 12, 2018

இலங்கை வரலாற்றை மாற்றப் போகும் உயர்நீதிமன்றம்!! மூன்று முக்கியஸ்தர்கள் யார்?? யார்??


நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பில் பதிலிறுக்க சட்ட மா அதிபர்கால அவகாசம் கோரியதால் உயர்நீதிமன்ற விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன..

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்றைய தினமே பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் காலை முடிவு செய்திருந்தது..

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட ஆயம் இவற்றை ஆராய்ந்தன ...

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்த பின்னர் இது தொடர்பில் மேலும் கால அவகாசம் தேவையென சட்ட மா அதிபர் தெரிவித்ததையடுத்து மனுக்கள் மீதான விசாரணைகளை நாளையும் தொடர தீர்மானித்து இன்றைய அமர்வை ஒத்திவைத்தனர் நீதியரசர்கள்...

இதில் தற்போது உள்ள பிரதம நீதியரசர் நளின் பெரேரா ஜனாதிபதி மைத்திரியால் நியமிக்கப் பட்டவர் தகுதி அடிப்படையில் இல்லாமல் மூப்பு அடிப்படையில் உயர் நீதி மன்ற நீதியரசர்கள் வரிசையில் ஆறாவது இடத்தில் இருந்தவர் ஆனாலும் பல நீதி மன்ற கட்டமைப்பில் நீதிபதியாக இருந்தவர்.

ஏனைய இருவரும் சட்டத்தரனிகளாக இருந்து மகிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரின் அரசியல் காலங்களில் நேரடியாக உயர்நீதிமன்ற நீதியரசர்களானவர்கள்.

ஒட்டு மொத்தத்தில் இவர்கள் மூவரும் மூன்று அணிகளாக உள்ளனர் மகிந்த - ரணிலால் நியமிக்கப் பட்ட இருவராலும் நியமிக்கப் பட்ட இரு உயர்நீதிமன்ற நீதியரசர்களானவர்களின் தீர்ப்பும் நிச்சயமாக எதிர் - எதிராக அமையும் இதனை தீர்மானிக்கும் தீர்ப்பு பிரதம நீதியரசர் நளின் பெரேரா அவர்களின் தீர்ப்பில் தங்கியுள்ளது.

இன்று உயர்நீதிமன்ற வழாகத்தில் நிறைந்த மக்கள் கூட்டம் மற்றும் வெளிநாடுகளின் அடுக்கடுக்கான எச்சரிக்கும் அறிக்கை என்பவற்றை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது பிழை என தீர்ப்பு எழுதினால் இலங்கையின் நீதித் துறை தப்பினாலும் அடுத்தடுத்து பாரிய இடியப்பச் சிக்கல்கள் காத்திருக்கின்றன.

ஜனாதிபதியின் தீர்ப்பு சரி எனக் கூறினால் இலங்கை நீதித் துறை மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கையும் நாளையுன் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டு சர்வதேசத்தால் ஒதுக்கப் படுவது உறுதியாகியுள்ளது.

இவைகளை அடிப்படையாக வைத்து இம் மூன்று நீதிபதிகளும் கடும் போக்காளர்கள் இல்லை என்பதுடன் ஒரு விதத்தில் இரக்க சுபாவமும் கடவுள் பயமும் உடையவர்கள்.

இப்படிப் பட்டவர்களாக இருந்தால் தீர்ப்பு எப்படி அமையும் என நீங்களே முடிவு செய்யுங்கள்... 

எது எப்படியோ பிரதம நீதியரசர்கள் ஆயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு நாளை காலை பத்து மணிக்கு கூடுவதுடன் மதியம் 2.00மணியின் பின் தீர்ப்பு வருவது உறுதியாகி உள்ளது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!