நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, November 28, 2018

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!


தற்போதைய காலநிலையியல் அறிவுறுத்தலின்படி மின்னல் தாக்கம் அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதனால் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாகவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலநிலை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வடகீழ் பருவகால பெயர்ச்சி காலநிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளது. இவ்வருடம் 2018 நவம்பர் 6 தொடக்கம் 11 வரையான காலப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக சுமார் 161,632 குடும்பங்களைச் சேர்ந்த 57,051 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

   
       
   
 

14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிலையங்கள் தங்களது நிலையங்களில் அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் அமைத்து நடைமுறைப்படுத்தல் மற்றும் அனர்த்த தயார்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறையினருக்கும் அறிவுறுத்துதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலநிலையியல் அறிவுறுத்தலின்படி, மின்னல்தாக்கம் அதிகமாக இடம்பெறக்கூடிய வாய்ப்புள்ளதனால் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு சகல பிரதேச செயலாளர்களின் ஊடாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

   
       
   
 

குறிப்பாக கரையோர பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள், ஆற்றங்கரையை அண்டியுள்ளவர்கள் மற்றும் தாழ்நிலப் பிரதேசத்தில் உள்ளவர்கள் மழை அதிகமாக கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களில் விழிப்பாக இருந்து செயற்படுவதுடன், குடும்ப அனர்த்த தயார்படுத்தல்களை முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்னொழுக்குகள், மனித தவறுகள் காரணமாக தீ அபாயங்கள் ஏற்படுவது வழக்கமாகும்.

   
       
   
 

இதனால் தீ அபாயங்களிலிருந்து வீடுகள், வியாபார ஸ்தலங்கள் மற்றும் திணைக்கள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!