நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, November 22, 2018

கிறிஸ்துவத்தை பரப்ப காட்டிற்குள் சென்ற ஆங்கிலேயர்.... கொடூரமாக கொலை செய்த ஆதிவாசிகள்


உலகெங்கிலும் ஆங்கிலேயர் கிருஸ்துவத்தையும் ஏசுவின் போதனைகளையும் பரப்பிவருகின்றனர். இந்தியாவில் ஆங்கிலேயர் விதைத்துப்போனதும் இதே கிருஸ்துவ மதம்தான்.

அதேபோல அந்தமான் தீவுகளில் செண்டினல் என்ற பகுதியில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு கிருஸ்தவத்தை பரப்பவேண்டும் என்ற நேக்கில் வந்த ஜான் ஆலன் என்ற அமெரிக்க நபர் இயேசுவின் போதனைகளை இந்த ஆதிவாசி மக்களிடம் பரப்பும் ஆசையுடன் செண்டினல் தீவுக்குச் சென்றுள்ளார்.

அதன் பின் தங்களுக்கு எதிரானவராகக் கருதிய ஆதிவாசிகள் ஜான் ஆலனை கொன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமானில் உள்ள செண்டினல் வசிக்கும் வெளீ உலகத்துடன் எந்த தொடர்பும் கொள்ளாமல் தனித்து தம் பாரம்பர்யத்தை காப்பாற்ற வாழ்கின்றனர்.

இதனால் இவர்கள் வெளி மனிதர்களை தங்களுடன் சேர அனுமதிக்க மாட்டார்கள்.

இந்நிலையில் கிருஸ்துவை பரப்ப அங்கு சென்ற ஜான் ஆலனை ஆதிவாசிகள் சிறைப்பிடித்து கொடூரமாக கொன்றுள்ளதாக செய்திகள் வெளீயாகின்றன.

ஜான் செண்டினல் தீவுக்கு செல்லும் முன் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அதில் ’நான் இயேசுவை பற்றி இங்குள்ள மக்களுக்கு தெரிவிக்க போகிறேன். அவர்கள் மொழியில் இதை தெரிந்துகொள்வார்கள் என எழுதியுள்ளார்.’

நவம்பர் 15 ஆம்தேதி எழுதப்பட்ட இந்தக் கடிதம் ஜான் ஆலனின் டைரியில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் இந்த டைரி அந்தமான் தீவிலுள்ள மீனவர்களிடம் கிடைக்கப்பெற்று ஜானின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!