நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, November 12, 2018

உலக புகழ்பெற்ற "சித்தன்னவாசல்" சிவனின் அதிசயம் தெரியுமா?

தமிழ்நாட்டின் புதுகோட்டை மாவட்டத்திலிருந்து 15 கிலோ 
மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது.
இங்குதான் 28 வருடங்களுக்கு ஒரு
முறை வெளிவரும் "சித்தன்னவாசல் 
சிவன்"பல ஆயிரம் நூற்றண்டுகளாக
குடைந்த மலைக்குள் நீர் நிறைந்த சுனைக்குள் இருக்கிறார்...பாண்டிய
மன்னர்கள் கட்டிய கோவில்....

காலம்:கி.பி 6 முதல் கி.பி 7-ம் நூற்றாண்டுகள்...

பதிவில்,தமிழர்களின் நாடாம் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம்,உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் இம்வாவட்டத்திலிருந்து 15 கிலோமீடடர்கள் தொலைவில் உள்ளது.சங்ககால ஓவியம்,சமணர் படுக்கை என பல அரிய பொக்கிசங்களால் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது.

சமணர் படுக்கைக்கு செல்லும் மலைக்கு செல்லாமல் சுற்றுலா துறையினரிடம் அனுமதி பெற்று மலையை ஒட்டி இடது புறமாக சென்று பின்புற மலைக்கு செல்ல வேண்டும்.இங்குதான் மலைக்குள் சிவன் இருக்கிறார்.குடைவரைக் கோவில்களை அமைத்தவர்கள் பாண்டியர்கள்.அவர்கள் ஆட்சியில்தான் கி.பி 6-ம் நூற்றாண்டிற்கும் கி.பி 8-ம் நூற்றாண்டிற்கும் இடையில் கட்டப்பட்ட கோயிலாகும்.இந்த சிவனுக்குத்தான் 28 வருடங்களுக்கு ஒருமுறை பூஜை நடைபெறுகிறது.

செங்கத்தாகவும்,சமதளமாகவும் செல்லும் மலப்பாதையில் 40 நிமிட பயணத்தில் வந்தடகிறது இந்த சிவதரிசனம்.

சுற்றிலா துறையின் அனுமதிபெற்று சுனையின் முழு கொள்ளளவு நீரையும்,மின் மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

உள்ளே ஒரு மண்டபம்.அதில் இறைவன் சிவலிங்க திருமேனியாக காட்சி தருகிறார்.பின் சில மணிநேரத்தில் மழை பெய்து திருமனியை மூடச் செய்து ,கோவிலும் மூழ்கி பயைபடி சுனையாகக் காட்சியளிப்பது நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வு.....ஒவ்வொரு 28 வருடங்களுக்கு ஒரு முறை இப்படியே நடைபெறுவது,எந்தவொரு அறிவியலும் இல்லாத பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாண்டியர்கள்  எவ்வாறு அறிந்து இந்த முறையை கடைபிடித்தார்கள் என்பதை இதுவரை அறிந்து கொள்ள முடியவில்லை..

வழிபாடு ஆரம்பித்ததும் பாதாளத்தில் இருக்கும் இறைவனின் மீது சூரிய ஔி பட ஆரம்பிக்கிறது.பல நூற்றாண்டுகளாக அல்லது ஆயிரக்கணக்கான வருடங்கள் நீரில் மூழ்கியிருக்கும் இறைவனின் சிவலிங்க திருமேனியானது துளிகூட பாசியடையாமல் இருப்பது பேரதிசயம்!!ஏனெனில்,சுற்றெங்கிலும் இருக்கும் பாறை 
மலையெல்லாம் பாசி படர்ந்துள்ள நிலையில் திருமேனி மட்டும் புதிதாய் காட்சியளிப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

இதோ,நமக்கருகில் நடக்கும் அதிசய நிகழ்வு,நமக்கு அறியா வண்ணமே உள்ளது என்பதை நினைக்க வேதனை தருகிறது..
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!