நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, November 22, 2018

பிரான்ஸில் பிறந்த குழந்தைக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்...

நேற்று புதன்கிழமை மெற்றோ தொடரூந்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குறித்த குழந்தை தனது 25 ஆவது வயது வரை இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என RATP அறிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை நவம்பர் 21 ஆம் திகதி, 22:40 மணி அளவில் Glacière நிலையத்தில் கர்பிணி பெண் ஒருவர் அழகிய குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

  ஆறாம் இலக்க மெற்றோவில் வைத்து இந்த குழந்தை பிறந்துள்ளது.

மேலும், குறித்த தொடரூந்துக்குள் மருத்துவர் ஒருவர் இருந்ததாகவும், குறித்த பெண் பிரசவிக்க அவர் உதவியதாகவும் அறிய முடிகிறது.

இந்த சம்பவத்தினால் 22:35 இல் இருந்து 23:10 வரையான நேரத்துக்குள், Raspail மற்றும் Place d'Italie ஆகிய இரு நிலையங்களுக்கிடையே போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து, குறித்த குழந்தைக்கு அடுத்த 25 வருடங்களுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்படும் என RATP அறிவித்துள்ளது.