நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, November 29, 2018

விமான பயணிகளை அச்சுறுத்தி நபர் செய்த வேலை! பின்பு நடந்த காமெடி...


விமானத்தில் இருந்து கொண்டு முகத்தை மூடியபடி விவகாரமாக ஸ்டேட்டஸ் போட்ட பொங்களூர் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று காலை மும்பை செல்லும் விமானத்தில் பெங்களூரைச் சேர்ந்த யோக்வேதாந்த் போத்தார் என்ற 21 வயது இளைஞர் இருந்துள்ளார்.

இவர் விமானம் கிளம்பும் முன்னதாக தனது முகத்தை மூடிக்கொண்டு செல்பி எடுத்து விமானத்தில் தீவிரவாதி பெண்ணின் இதயத்தை சிதறடிப்பவன் என்று பதிவிட்டு நண்பர்களுக்கு புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.

இவரது செயலை பார்த்து அருகிலுள்ளவர் சந்தேகமடைந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து விமானத்துக்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் தான் ஒரு அப்பாவி என்றும் விமானத்தில் உள்ளே குளிராக இருந்ததால் கைக்குட்டையால் முகத்தை கட்டியிருந்ததாகவும் கூறியிருந்தார்.

பின்னர் அவரது குடும்பத்தை தொடர்பு கொண்டு விசாரித்த பின்னர் அவரை விமானத்தில் பயணிக்க பொலிசார் அனுமதி அளித்தனர்.

இவரது இந்த காமெடி செயலால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!