நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, November 29, 2018

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோஹ்லியின் தற்போதைய வருமானம் எவ்வளவு தெரியுமா?


உலகளவில் அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோஹ்லி இடம்பெற்றுள்ளார்.

பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் நூறு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோஹ்லி இடம்பிடித்துள்ளார்.

விராட் கோஹ்லி ஒரே நேரத்தில் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய அணித்தலைவர் என்ற அந்தஸ்தில் இருப்பதால், அவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதன்மூலம் கோஹ்லியின் வருமானமும் உயர்ந்து வருகிறது.

கடந்த 12 மாதங்களில் 24 மில்லியன் டொலர்கள் வருமானத்தை கோஹ்லி ஈட்டியுள்ளார். இதில் சுமார் 20 மில்லியன் டொலர்களை விளம்பரத்தின் மூலமாகவும், 4 மில்லியன் டொலர்களை கிரிக்கெட்டின் மூலமாகவும் கோஹ்லி சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இதனால், அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் 83வது இடத்தை அவர் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தை பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை மெஸ்சியும் பிடித்துள்ளார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!