நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, November 30, 2018

சபரிமலை விவகாரம்: தொடை தெரிய அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட பெண் கைது


ஐயப்பன் மாலை போட்டு தொடை தெரிய ஆடை அணிந்த புகைப்படத்தால் கைதான ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு பிரிவில் பணியாற்றிய 32 வயதான ரெஹானா பாத்திமா ஒரு செயற்பாட்டாளர் மற்றும் மொடல் ஆவார்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல முயன்ற இவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சென்றாலும் இவரால் சபரிமலைக்குள் செல்ல இயலவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதில் இருந்து இன்று வரை எந்த பெண்களையும் ஐயப்பன் கோயிலுக்குள் போராட்டகாரர்கள் அனுமதிக்கவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று கொச்சியில் பாத்திமா அவர் பணிபுரியும் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக, அவரது தோழி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் பணிபுரியும் பி.எஸ்.என்.எல் நிறுவனம், இந்த விசாரணை முடியும் வரை பாத்திமாவை இடைநீக்கம் செய்துள்ளது.

ஃபாத்திமாவை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஃபாத்திமா மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். அதில் அவர் கருப்பு உடை அணிந்து, நெற்றியில் சந்தனம் மற்றும் அவரது தொடை தெரியுமாறு அந்த புகைப்படம் இருந்தது.

அந்தப் புகைப்படம் உடல் பாகங்களை வெளிப்படுத்துமாறு இருந்ததாகவும், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துமாறு இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, பொலிசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரெஹானாவை ஜாமினில் விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை எனில், நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகுவோம் என தோழி ஆர்த்தி கூறியுள்ளார்.


நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!