நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, November 24, 2018

விஜய் மல்லையாவின் தங்க கழிவறைக்கு வந்த சோதனை

விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய ரூ. 9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் லண்டன் சென்று அங்கு வசித்து வந்த அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் வாங்கிய கடனுக்காக சொத்துக்கள் அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டன.

லண்டன் சொத்துகளைப் பாதுகாக்க லண்டன் நீதிமன்றத்தில் அவரது சட்டக்குழு எவ்வளவு போராடியும் இறுதியில் தோல்வியடைந்தனர்.

இதனால் சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி மல்லையாவின் அடமானக் கடனின் பேரில் லண்டன் கார்ன்வால் டெரஸில் உள்ள மல்லையாவின் ரீஜென்ட்ஸ் பார்க் மேன்ஷன் பறிமுதல் செய்யப்பட உள்ளது.

அந்த மேன்ஷனில் மல்லையா வைத்துள்ள தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் இருக்கையும் பறிமுதல் செய்யப்படவுள்ளது.

யுபிஎஸ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய அடமானக் கடன் தொகை 20.4 மில்லியன் பவுண்ட் செலுத்தப்படாததால் இந்தச் சொத்துகளை வங்கிப் பறிமுதல் செய்கிறது.

மேலும் லண்டன் நீதிமன்றம் யுபிஎஸ் வங்கிக்கு மல்லையா தரப்பு 88,000 பவுண்ட் இடைக்கால சட்ட கட்டணங்களாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.