நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, November 17, 2018

மரணத்திற்கு முன் ஐன்ஸ்டீன் சொன்ன வார்த்தைகள்; சாவிலும் ஒரு நேர்த்தி!


மூன்று வகையான மக்கள் உள்ளனர். முதல் வகைக்கு, "ஐன்ஸ்டீன்" என்று கூறியதும் ஒரு பரட்டை தலை கொண்ட உருவம் கண்முன்னே வந்து போகும். இரண்டாம் வகை மக்களுக்கு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்றதுமே இன்றும் கூட நவீன இயற்பியலின் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராகவும், இந்த துறைக்குள் புகுந்த பலருக்கும் ஒரு உத்வேகமாகவும் இருக்கிறார் என்கிற மேலோட்டமான விவரங்கள் ஞாபகத்திற்கு வரும்.

மூன்றாவது வகையில் வெகு மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றிய பெரும்பாலான மற்றும் சுவாரசியமான கதைகள் தெரிந்து இருக்கும். நீங்களும் இந்த வகையில் இணைய வேண்டுமா? கவலையை விடுங்க, அடுத்த மூன்று நிமிடங்களில் ஐன்ஸ்டீனினை பற்றிய மிக சுவாரசியமான 10 விஷயங்களை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.மாஸ் - எனர்ஜி

   
       
   
 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தனது மாஸ் - எனர்ஜி சமன்பாட்டு சூத்திரமான இ = எம்சி2 என்பதின் வழியாக பொது மக்களால் நன்கு அறியப்பட்டவர். ஆனால் இந்த கோட்பாடாய்ந்த்து அது அணு குண்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவதற்கு உதவியது என்பது நம்மில் பலருக்கு தெரியாத ஒரு விடயமாகும்.பொது சார்பியல் கோட்பாடு

உள்ளூரில் மட்டுமே பிரபலமாக திகழ்ந்த ஐன்ஸ்டீனின் புகழை உலகம் முழுக்க பரப்பியது எந்த கோட்பாடு என்று உங்களுக்கு தெரியுமா? - பொது சார்பியல் கோட்பாடு (ரிலேட்டிவிட்டி தேற்றம்) தான்.ஒளியின் வேகம்

ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடோடு நின்றுவிடவில்லை, அதன் சிறப்பு கோட்பாட்டை ஒன்றையும் அதே பெயரின் கீழ் உருவாக்கினார் என்பது பற்றி தெரியுமா? ஆம், இந்த கோட்பாடானத, வெவ்வேறு உறுதியற்ற பிரேம்களிலும் (ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய வேகங்களில்) நகரும் பொருள்களிலும் கூட இயற்பியல் விதிகள் ஒரேமாதிரியாகவும், மற்றும் ஒளியின் வேகம் அனைத்து உறுதியற்ற பிரேம்களிலும் தொடர்ந்து மாறிக் கொண்டும் இருக்கிறது என்பதை விளக்குகிறது.நோபல் பரிசு

சரி ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு கிடைத்தது என்பது தெரியுமா? ஆம், 1921 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஐன்ஸ்டீன் வென்றார். ஒளிமின் விளைவை (photoelectric effect) விளக்கியதின் விளைவே இந்த பரிசு.சொன்னால் நம்புவீர்களா?

ஐன்ஸ்டீன் மற்றும் அவரது முன்னாள் மாணவர் ஆன லியோ சில்லாட் இணைந்து 1926 இல் (மற்றும் 1930 இல்) குளிர்சாதன பெட்யை கண்டுபிடித்தனர். இந்த அப்சார்ப்ஷன் ரெஃப்ரிஜிரேட்டர் ஆனது மிகவும் புரட்சிகரமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், இது எந்தவிதமான நகரும் பகுதிகளை கொண்டிருக்கமால், வெறும் வெப்பத்தை மட்டுமே உள்ளீடாக கொண்டு இயங்கியது.300-க்கும் அதிகமான அறிவியல் ஆய்வு

அறிவியல் அறிஞரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 300-க்கும் அதிகமான அறிவியல் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார் என்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம். ஆனால் அதில் 150 ஆய்வுகள் அறிவியலை சாராதா ஆய்வுகள் என்பதை அறிவீர்களா?அறிவியல் சாராத ஆய்வுகளை கூட ஏற்றுக்கொள்ளலாம்

   
       
   
 

ஆனால் ஐன்ஸ்டீன் அவரது இளமைப் பருவத்தில் தன் இசைக்காக ஒரு பாராட்டைப் பெற்றார் என்பதும், பின்னர் "நான் ஒரு இயற்பியலாளர் ஆக உருமாறவில்லை என்றால், ஒருவேளை நான் ஒரு இசைக்கலைஞராகவே இருப்பேன், நான் அடிக்கடி இசை பற்றி நினைப்பேன். இசைப்பது போன்று பகற்கனவு காண்பேன். இசையில் இருந்து தான் என் வாழ்க்கையின் மிகுந்த மகிழ்ச்சியான நேரங்களை அனுபவிப்பேன்." என்று எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இரண்டு முறை திருமணம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் மனைவியான மரிக்கிற்கு இரண்டு மகன்கள். ஐந்து ஆண்டுகால வாழ்க்கைக்கு பின்னர் அவர்கள் 1919 ஆம் ஆண்டில் முறையாகப் பிரிந்தனர்.மார்கோட் மற்றும் இல்ஸ்

. பின் ஐன்ஸ்டீன் அவருடைய உறவினரான எல்சா லோவென்தாலை திருமணம் செய்து கொண்டார். அவர் சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சினைகள் கண்டறியப்பட்ட பின்னர் அவர் 1936 இல் இறந்தார். இந்த தம்பதியர் இரண்டு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை - மார்கோட் மற்றும் இல்ஸ் - வளர்த்தனர்.ஏப்ரல் 18

ஏப்ரல் 17, 1955 இல், ஐன்ஸ்டீன் அடிவயிற்றின் அரோடிக் அனரிசைம் ஏற்பட்டதன் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சைக்கு ஐன்ஸ்டீன் மறுத்துவிட்டார், "நான் விரும்பும் போது செல்ல விரும்புகிறேன், செயற்கை முறையில் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதில் சுவாரசியம் இல்லை, என்னுடைய பங்கை நான் செய்திருக்கிறேன், இது போவதற்கான நேரம், நான் அதை நேர்த்தியாக செய்வேன்" என்றார். பின் ஏப்ரல் 18, 1955 அன்று காலமானார்.மின்னல் வேக வரிகளில் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு!

ஜெர்மனியில், 1879 ஆம் ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெர்னில் உள்ள சுவிஸ் காப்புரிமை அலுவலகம் ஒன்றில் எழுத்தராக பணிபுரியும் போது தான், அறிவியல் உலகம் கண்டறியாத "அட்டகாசமான" கோட்பாட்டுகள் உருவாக்கம் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, நாஜிக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்தபோது ஐன்ஸ்டீன் தாய்நாடான ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். பின் நியூ ஜெர்சி மற்றும் பிரின்ஸ்டனில் வாழ்ந்து, பணியாற்றினார்.

பின்னர் உருவான இவரின் அறிவார்ந்த சாதனைகளானது, "ஜீனியஸ்" என்கிற வார்த்தைக்கு "ஐன்ஸ்டீன்" என்கிற அர்த்தத்தை கொடுத்தது. 1946 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் பென்சில்வேனியாவிலுள்ள லிங்கன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார் (வரலாற்றுரீதியாக கருப்பு கல்லூரி), அங்கு அவருக்கு கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!