நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, November 23, 2018

வடக்மகில் மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் நாளை அதிகாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் அடிக்கடி நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.