நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, November 16, 2018

அகதிகளுக்காக ஒன்று சேர்ந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்!


மற்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் ஒரு முன்னுதாரணமாக சுவிட்சர்லாந்து அபூர்வ மும்மதப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Swiss Council of Religions வெளியிட்டுள்ள அந்த பிரகடனத்திற்கு, The United Nations High Commission on Refugeesம் (UNHCR) தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

அகதிகள் பாதுகாப்பு குறித்து ஐந்து விடயங்களை உறுதிபட தெரிவிக்கும் 16 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில், மூன்று முக்கியமான மதங்களைச் சார்ந்த ஆறு பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

   
       
   
 

அவர்களில் சுவிஸ் கூட்டமைப்பு இஸ்ரேலிய சமூகங்கள்,

சுவிட்சர்லாந்தின் பிஷப்பு மாநாடு மற்றும் சுவிட்சர்லாந்தின் புராட்டஸ்டன்ட் சர்ச் கூட்டமைப்பு, ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

மதமும் நம்பிக்கையும் அகதிகளின் ஒன்றிணைந்து வாழ்தலுக்கு இன்றியமையாத விடயங்களாகும் என்று தெரிவிக்கும் அந்த அறிக்கை, பல்வேறு மத அமைப்புகள் புதிதாக வரும் அகதிகளுக்கும் ஏற்கனவே நாட்டின் குடிமக்களாக இருப்பவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட முடியும் என்கிறது.

இந்நிலையில், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என மூன்று மதத்தினருமே, ஒவ்வொரு மனிதனும் கடவுளின் படைப்பு என்றும், அவரது பாதுகாப்புக்கு உரியவர்கள் என்றும் நம்புவதால், அகதிகள் குறித்த ஒரு சிறப்புக் கடமை நமக்கு இருக்கிறது என்கிறார் சுவிஸ் கத்தோலிக்க பிஷப்பும் Swiss Council of Religionsஇன் தலைவருமான Harald Rein.

மும்மத பிரகடனத்தில், சிரியப்போருக்கு தப்பி வந்தவர்கள் உட்பட 3,500 பேருக்கு புகலிடம் அளித்துள்ள சுவிட்சர்லாந்தின் அரசியல் தலைவர்களுக்கு ஐந்து முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

   
       
   
 

மேலும், புகலிட நடைமுறைகள் நியாயமானதாகவும் திறம்பட்டதாகவும் இருக்க வேண்டும், விரைவான ஒன்றிணைப்பு மற்றும் போதுமான பாதுகாப்பு, குடியமர்வு கொள்கையை அமுல்படுத்துதல் மற்றும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வரைமுறைகளுக்கு உட்படாதவர்களையும் கண்ணியத்துடன் நடத்துதல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மும்மதத்தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!