நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, November 17, 2018

புன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது!


#Hitler #ஹிட்லர்
ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரியான ஹிட்லரின் பெயரைக் கேட்டால், இன்றும் அனைவரும் நடுங்குவார்கள். அந்தளவிற்கு யூதர்களை மிக மோசமாக படுகொலை செய்து குவித்தவர் ஹிட்லர். 

இவர் எப்போதும் சிரிப்பதே இல்ல என்று கூறுகின்றவர்களின் கருத்தை பொய்யாக்கும் ஒரு புகைப்படம் உள்ளது.
   
       
   
  ஹிட்லர் ஒரு சிறுமியை அணைத்துக் கொஞ்சும் புகைப்படம், இவரது அன்பைக் காட்டுவதாக பல மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். 

இந்த நிலையில், குறித்த புகைப்படம் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இந்தப் படம் சுமார் 8.3 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது.

குறித்த படத்தில் ஹிட்லருடன் இருக்கும் சிறுமி ரோசா பெர்னைல் நைனா. இந்த படத்தை எடுத்தபோது அவருக்கு வயது 6. 1943ம் ஆண்டு அவர் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
   
       
   
  இந்தப் படம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லர் அன்பான தலைவர் என்று பிரச்சாரம் செய்வதற்காக எடுக்கப்பட்டது என வொஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அரிதான இந்த புகைப்படம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!