1622 சித்திரை மாதம் தமிழ்
புத்தாண்டின் போது போர்த்துகீசியர்களால்
முழுவதுமாக சிதைக்கப்பட்டது.பின்னர்
அக்கோவிலின் நினைவாகா தமிழர்கள்
ஒரு தூணை எழுப்பினர்...
பதிவில்,1622-ம் ஆணடு போர்த்துகீசியர்களால் இடிக்கப்பட்ட ஆலயமும்,தற்போது உள்ள ஆலயமும் பதிவில்(படத்தில் காட்டப்பட்டுள்ளது).மேலும்,மைக் வில்சனால் கடலில் கண்டெடுக்கப்பட்ட சுயம்பு லிங்கம்,1623-ம் ஆண்டு போர்த்துகீசியர்களால் இடிக்கப்பட்டு எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் தூண்களை கொண்டு கட்டப்பட்ட பிரட்ரிக் கோட்டை....மற்றும் கடலில் வீசப்பட்ட ஆலய சிலைகள்..தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று அடையாளச் சின்னங்கள் இன்றைய ஆட்சியாளர்களால் மட்டுமல்ல பல நூற்றாண்டுளாகவே சிதைக்கப்பட்டு அழிக்கப்படு வந்திருக்கிறது.....
திருக்கோணேஸ்வரம் சோழர்களால் கட்டப்பட்டது என்று கூறினாலும் கி.மு 150 ஆண்டுகளுக்கு முன்பே ஈழ மன்னன் திருகேணேஸ்வரத்திற்கு சென்று வழிபட்டான்.இதன் மூலம்அவன் காலத்திற்கு முன்பே,இந்த ஆலயமானது அமைந்திருக்கிறது.
திருக்கோணேஸ்வரம் கோவிலுக்கு "கோகர்ணம்"என்னும் ஒரு பெயர் வரலாற்றில் வழங்கப்பட்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.கி.மு 400 க்கும் கி.மு 100 மிடையே எழுதப்பட்ட மஹாபாரதத்தில் "கோகர்ணம்"என்னும் இந்த திருக்கோணேஸ்வரத்தை பற்றி கூறப்பட்டுள்ளது.மஹாபாரதம்,இராமாயணம் இரண்டிலும் இடம் பெற்ற ஆலயம் இந்த கோகர்ணம் என்ற திருக்கோணேஷ்வரம் ஆகும்.
அருணகிரி நாதர்,சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் போன்ற நாயன்மார்கள் வழிபட்டு சென்ற தலம்.திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தேவார பதிகமும் கோணேஸ்வரம் பற்றி குறிப்பிடுகிறது.சம்பந்தரின் காலம் கி.பி 7-ம் நூற்றாண்டு ஆகும்.இப்படி இந்த கோணேஸவரம் ஆலயமானது இந்த கலியுக காலத்திற்கு முற்பட்ட யுகங்களிலேயும் அழயாப் புகழோடு விளங்கியது.
1622-ல் போர்த்தீஸ்கீயர்கள் திருகோணேஸ்வரத்தை தகர்த்து பெயர்த்த கற்களையும்,தூண்களையும் கொண்டே துறைமுகத்தில் உள்ள "ஃபிரட்டிரிக்"கோட்டையை கட்டினர்.கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமானதால் இந்த கோட்டையை உருவாக்கி தங்கள் தேவைகளை பூரத்திசெய்தனர்.பின்பு மட்டக்கிளப்பு போலவே பல்வேறு கரங்களுக்கு மாறியது.மேலதிகமாக பிரான்சும் இந்த கோட்டயை கைப்பற்றியது.
மைக் வில்சன் என்ற திரைப்பட இயக்குனர் கோணேஸ்வரம் பகுதியில் சாகடல் அதிசயஙகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது,போர்த்துகீசியர்களால் தூக்கி வீசப்படட கோணேஸ்வர சுயம்பு லிங்கத்தை கடலில் இருந்து கண்டெடுத்தார்.மைக் வில்சன் பின்நாளில் தன்னை சுவாமி சிவ கல்கி என அழைத்துக் கொணடார்.தற்போது,ஆலயத்தை ஒட்டிய கடலில் இருந்து சிலைகளை கண்டெடுத்தனர்.இவைகள் போர்த்துகீசியர்களால் கடலில் தூக்கி வீசப்பட்ட வரலாற்று பாரம்பரிய சிலைகள் ஆகும்....
இப்படியாக,திருக்கோணேஸ்வர ஆலயமானது அன்று அழிந்தது போலவே,இன்றும் உள்ள சிங்கள புத்த அரசுகளால் ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள பௌத்த குடியேற்றங்கள்,புத்த விகாரைகள் அமைத்தல் என ஆலயதமிழர் பிரதேசங்கள் விழுங்கப்பட்டு,தமிழர்களை முழுவதுமாக அழிப்பதில் என்றுமில்லாத அளவில் அக்கறை காட்டி வருகிறது சிங்கள தேசம்...
வழித்தெழு தமிழா....வீருகொண்டு எழு!!
0 கருத்துரைகள்:
Note: Only a member of this blog may post a comment.