நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, November 27, 2018

3000 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட, இளவரசி துயாவின் சவப்பெட்டி திறக்கப்பட்டது....


மம்மி என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிப்பதாகும்.

இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும்,

   
       
   
  கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவதுண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து வருகின்றனர்.

எகிப்தில் மட்டும் நூறு கோடி விலங்குகளின் மம்மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் மனித மம்மிக்களின் சவப்பெட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் திறந்ததே இல்லை.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழமையானது 1940 இல் வட அமெரிக்காவில் கண்டுபிடுக்கப்பட்ட மம்மிக்களாகும். அவை சுமார் 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என அறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வாளர்கள் சுமார் 300 மீட்டர் தூர இடிபாடுகளை 5 மாத கால முயற்சிகளுக்குப் பின் அகற்றி ஒரு பழங்கால கல்லறையைக் கண்டுபிடித்தனர்.

   
       
   
 

அதில் இரண்டு சவப்பெட்டிகள் இருந்த நிலையில் அவற்றை அவர்கள் திறந்து பார்த்தனர். அவற்றில் துயா என்ற பெண் உட்பட 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எகிப்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் உடலங்கள் இருந்தன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளும் இருந்தன.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!