நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, November 19, 2018

நிலைதடுமாறி விபத்தான கார்.. அடுத்தடுத்து பயங்கரமாக மோதிக்கொண்ட 28 லாரிகள்..! பரிதாபமாக பலியான 3 பேர்
சீனாவில் உள்ள ஹேனான் மாகாணத்தில் கார் ஒன்று நிலை தடுமாறி விபத்து ஏற்பட்ட காரணத்தினால் 28 லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
   
சீனாவின் மத்திய பகுதி ஹேனான் மாகாணத்தில் உள்ள ஸுமாடியான் நகரில் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் சாலையிலேயே குறித்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

அதாவது, குறித்த சாலையில், காலை 8 மணியளவில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன.

அப்போது, பிங்யூ எனுமிடத்தில் கார் ஒன்று நிலைதடுமாறி விபத்துகுள்ளானது. இதன் எதிரொலியாகவே 28 லாரிகள் ஒன்றோடொன்று மோதி கொண்டுள்ளன.
   
குறித்த சாலை விபத்தில், 3 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.