Wednesday, November 7, 2018

எப்பொழுதும் ஹெட்போனுடன் சுத்துபவரா நீங்கள்...? அப்போ இத படிங்க முதல்ல..!

  admin       Wednesday, November 7, 2018


நமது காதுகளுக்குப் பாதுகாப்பான ஒலி அளவு என்பது 40 முதல் 50 டெசிபல் அளவுதான். ஆனால் ஹெட்போன்களைப் பயன்படுத்தும்போது அதன் அளவு அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிக ஒலியைக் காதுகள் கேட்டுக்கொண்டிருக்கும்போது செவித்திறன் பாதிக்கப்படுகிறது.
   
       
   
 

இன்றைய இளம் தலைமுறையிடமிருந்து செல்போனை எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதேபோல் ஹெட்போனையும் பிரிக்க முடியவில்லை. அலுவலகத்தில், பயணங்களில், வாகனப் பயணத்தில், ஜிம்மில், உடற்பயிற்சி செய்யும்போது என ஹெட்போன் எப்போதும் காதுகளிலேயே ஒட்டியிருக்கிறது. சிலர் உறங்கும்போதுகூட காதுகளில் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹெட்போன் பாதிப்புகள்

வீட்டுக்கு ஒரு ரேடியோ வைத்து குடும்பமே கேட்ட காலம்போய், செல்போன், கணினி என கேட்ஜெட்டுகளில் ஹெட்போன்கள் போட்டு தனித்தனியாகக் கேட்கும் பழக்கம் வந்துவிட்டது. இன்று அவை காதுகளையே பலி கேட்கின்றன. `ஹெட்போன்களை அதிக அளவில் பயன்படுத்தும்போது செவித்திறனையை இழக்க நேரிடும்' என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனமும் இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு உலக நாடுகளுக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. `ஹெட்போன் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பற்ற ஒலிகளைக் கேட்பதால் உலக அளவில் 110 கோடி இளைஞர்கள் தங்கள் செவித்திறனை இழக்க வாய்ப்புள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

   
       
   
 

மேலும், அனைத்து நாடுகளும் கடுமையான சட்டங்கள் மூலம் பாதுகாப்பற்ற ஒலி பயன்பாட்டைத் தடுக்கவேண்டும். ஹெட்போன் உள்ளிட்ட ஆடியோ சாதனங்கள் செவித்திறனுக்குப் பாதுகாப்பு தரும்விதமாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

நமது காதுகளுக்குப் பாதுகாப்பான ஒலி அளவு என்பது 40 முதல் 50 டெசிபல் அளவுதான். ஆனால் ஹெட்போன்களைப் பயன்படுத்தும்போது அதன் அளவு அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிக ஒலியைக் காதுகள் கேட்டுக்கொண்டிருக்கும்போது செவித்திறன் பாதிக்கப்படுகிறது.

ஹெட்போன் மட்டுமன்றி தொலைபேசி, செல்போன்களில் அதிக நேரம் பேசினாலும் இதே பாதிப்புகள் ஏற்படும். கால் சென்டர்கள், தொடர்ச்சியாக அதிக தொலைபேசி அழைப்புகளில் பேச வேண்டிய பணியில் இருப்பவர்களுக்கும் செவித்திறனில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

logoblog

Thanks for reading எப்பொழுதும் ஹெட்போனுடன் சுத்துபவரா நீங்கள்...? அப்போ இத படிங்க முதல்ல..!

Previous
« Prev Post