நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, November 18, 2018

மத்திய வங்கக் கடலில் உருவான இன்னுமொரு தாழமுக்கமானது அடுத்த 24 மணி நேரத்தில்
மத்திய வங்கக் கடலில் உருவான இன்னுமொரு தாழமுக்கமானது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, எதிர்வரும் நவம்பர் 20 தேதி அதிகாலை 3.00 மணி அளவில் வடமராட்சி கிழக்கு, சாலை முகத்துவாரம், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை அருகே நிலைகொண்டு இருக்கும். 
   
       
   
  பின்னர் சற்று வலு பெற்று மேற்கு வட மேற்கு திசையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இந்தியாவில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த தாழமுக்கம் மேற்குறித்த கரையோரப் பகுதிகளில் காணப்படும்போது காற்றின் வேகம் உயர்வாகக்(50- 70 கி. மீ.) காணப்படும். அதே வேளை கன மழையும் கிடைக்கக் கூடும். வடக்கு கிழக்கு கரையோரப் பகுதிகளில் பலத்த மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்.குடாநாடு முழுவதும் எதிர்வரும் 20,21 மற்றும் 22ம் திகதிகளில் பரவலான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். வட மாகாணம் முழுவதும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை கிடைக்கக் கூடும். இக்காலப்பகுதிகளில்
   
       
   
 
கடல் அலைகள் வழமையை விட உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்கப்படுகிறார்கள். 

குறிப்பு: மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் 21ம் திகதி உருவாவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது. இது தொடர்பான விபரங்கள் பின்னர் தரப்படும்.
- நா.பிரதீபராஜா-
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!