Thursday, November 22, 2018

22 முதல் 28 வரை இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் பேரதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்! குருவின் பார்வையால் இப்படி ஒரு மாற்றமா..?




உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். இந்த வாரம் 5 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

துலாம் ராசி

இந்த வாரம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம்இருந்த சங்கடம் மாறும். உத்தியோகத்தில் திடீர் பயணத்தைச் சந்திக்க நேரலாம்.
   
       
   
 
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்புடன் இருங்கள். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத் துறையினருக்கு எதையும் யோசித்துச் செய்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள் - புதன், வியாழன், வெள்ளி
திசைகள் - மேற்கு, தென்மேற்கு
நிறங்கள் - சிவப்பு, வெள்ளை
எண்கள் - 3, 5, 6
பரிகாரம் - லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும்.
விருச்சிக ராசி

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் உட்பட அனைத்து கிரகங்களின் சாரம் அனுகூலமான பலன்களைத் தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். உற்சாகம் உண்டாகும். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உற்சாகமாக காணப்படுவார்கள்.

குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதால் அவர்களிடம் நன்மதிப்பைப்பெறுவீர்கள்.

பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கலைத் துறையினருக்கு பணிகள் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு மனோதிடம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள் - ஞாயிறு, செவ்வாய், வெள்ளி
திசைகள் - வடக்கு, தென்மேற்கு
நிறங்கள் - சிவப்பு, மஞ்சள்
எண்கள் - 1, 6, 9
பரிகாரம் - பழனி முருகனை வணங்கி வர குடும்ப பிரச்ணினை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு ராசி

இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரவு திருப்தி தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.

அனுசரித்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் ஏற்படலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் செலவுகளைக் குறைப்பது நன்மை தரும்.

கலைத் துறையினருக்கு, நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு பண உதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள் - வியாழன், வெள்ளி
திசைகள் - கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள் - மஞ்சள்
எண்கள் - 3, 6
பரிகாரம் - பைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.
மகர ராசி

இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்களால் உதவி கிடைக்கும்.

திடீர் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில்,வியாபாரத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

வியாபாரத்துக்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாகச்செய்து முடிப்பீர்கள்.
   
       
   
 

வருவாய் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்குள் சகஜநிலை நீடிக்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள் - செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள் - தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள் - சிவப்பு, பச்சை
எண்கள் - 5, 6, 9
பரிகாரம்: வினாயகப் பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும்.
கும்ப ராசி

இந்த வாரம் எல்லா காரியங்களும் சுமுகமாக நடந்து முடியும். துணிச்சல் உண்டாகும். எதையும் வேகமாகச் செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை, தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.

புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.

கலைத் துறையினருக்கு பேச்சாற்றலால் தொழில் லாபம் கூடும். அரசியல்வாதிகள் மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள் - ஞாயிறு, வியாழன்
திசைகள் - மேற்கு, தென்மேற்கு
நிறங்கள் - சிவப்பு, நீலம்
எண்கள் - 1, 3
பரிகாரம் - ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.
மீன ராசி

இந்த வாரம் ராசிநாதன் குருவின் பார்வையால் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள்.ஜனன காலச் சந்திரனுக்கு மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக இருக்கிறார்கள்.

பணவரவு அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். கலைகளில் ஆர்வம் பிறக்கும். மனக்கட்டுப்பாடு அவசியம். சின்ன விஷயங்களிலும் மன நிறைவு கிடைக்கும்.
   
       
   
 

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகத்தில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

அலுவலகத்தில் அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்தினருக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள் - வியாழன், வெள்ளி
திசைகள் - வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு
நிறங்கள் - வெள்ளை, மஞ்சள்
எண்கள் - 3, 6
பரிகாரம் - குல தெய்வத்தைப் பூஜித்து வணங்கிவர எல்லாத்தடைகளும் நீங்கும்.

0 கருத்துரைகள்:

Note: Only a member of this blog may post a comment.

wintamila