நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, November 30, 2018

2.0 மேனியா: ஆட்டோவை செல்போன் பறவையாக மாற்றிய ரஜினி ரசிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் தாக்கத்தால் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவை செல்போன் பறவையாக மாற்றி அசத்தியுள்ளார்.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் நேற்று வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த தகவலை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ரஜினி பட மாஸ் இல்லையென விமர்சனங்கள் வெளியானாலும், மண் சோறு தின்னும் ரசிக வெறியர்களும் இருக்கிறார்கள்தானே. அப்படியான ஒருவர் பற்றிய செய்தி இது.

இப்படத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பேர்ட் மேன்’ கெட்டப்பில், மொபைல் போன்களை வைத்து தனது ஆட்டோவை அலங்காரப்படுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்து விட்டு, இங்கும் யாராவது முயற்சித்து விடாதீர்கள் பாஸ்.. ஆட்டோவில் அதிகமாக அலங்காரம் செய்தால், போக்குவரத்து பொலிசார் தண்டப்பணம் விதிப்பது குறிப்பிடத்தக்கது.