நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, November 17, 2018

2 கோடிக்கு நிச்சயதார்த்த மோதிரம்.. ப்ரியங்கா சோப்ரா திருமணம் செய்யும் இடத்தைப் பாருங்க!.. அசந்துபோயிடுவீங்கநடிகை ப்ரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் நடைபெற உள்ள இடத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங் திருமணம் நேற்று நடந்தது. இதையடுத்து ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது. அவர்களின் திருமண நிகழ்ச்சி நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
   
       
   
 

அரண்மனை

ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமணம் நடக்க உள்ள இடத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. புகைப்படங்களை பார்த்தாலே அசந்து போகும் அளவுக்கு பிரமாண்டமாக இருக்கிறது.

ப்ரியங்கா

அரண்மனையில் ராஜ வம்சத்தினர் போன்று திருமணம் செய்து கொள்ளும் ஆசை பலருக்கும் இருக்கலாம். ஆனால் ப்ரியங்காவுக்கு அந்த ஆசை நிறைவேறப் போகிறது. அவர் ஜோத்பூரில் உள்ள தாஜ் உமைத் அரண்மனையில் திருமணம் செய்து கொள்கிறார். அவரின் திருமணம் மீது தான் அனைத்து கண்களும் உள்ளது.
   
       
   
 

செலவு

ப்ரியங்கா, நிக் ஜோனஸ் தங்களின் திருமணத்திற்கு காசை தண்ணீராக செலவு செய்கிறார்கள். நிச்சயதார்த்ததிற்கே ப்ரியங்காவுக்கு ரூ. 2.1 கோடிக்கு மோதிரம் போட்ட நிக் திருமணத்திற்கு எத்தனை கோடி மதிப்புள்ள மோதிரம் போடப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ப்ரியங்கா பேச்சுலர் பார்ட்டிக்கே ரூ. 9.5 கோடிக்கு நகை அணிந்திருந்தார். திருமணத்திற்கு இதைவிட அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!