நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, October 5, 2018

விஜய் பெயரை கெடுக்கும் வகையில் சர்கார் படத்தில் அப்படி ஒரு விஷயம் வைத்தது ஏன்- முருகதாஸ் முதன்முறையாக கூறிய பதில்

பெரிய நடிகர்களாக வளர்ந்துவிட்டால் ஒரு சில விஷயங்களை தவிர்க்க வேண்டியது இருக்கும். அவர்களை பார்த்து அப்படியே நடக்கக்கூடிய ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
அப்படி பல வருடங்களுக்கு முன் தன்னுடைய படத்தில் இனி சிகரெட் பிடிக்கும் காட்சி வராது என்று கூறியிருக்கிறார் விஜய், ஆனால் சர்கார் பட போஸ்டரே விஜய் சிகரெட் பிடிப்பது போல் வந்தது, கூடவே பிரச்சனைகளும் எழும்பின.
ஒரு பேட்டியில் ஏ.ஆர். முருகதாஸ், கார்ப்பரேட் ஹெட் எப்படி இருப்பான் என்று காண்பிப்பதில் சிகரெட் பிடிப்பது போல் வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது, அதனால் தான் வைத்தேன், பின் ஒரு சில காட்சிகளில் வரும் அவ்வளவுதான்.
ஆனால் படத்தின் வேறு யாரும் பிடிக்க மாட்டார்கள், இது தவறான விஷயம் தான், நான் ஒப்புக் கொள்கிறேன், இதை பார்த்து விஜய் ரசிகர்கள் யாரும் சிகரெட் பிடிக்க மாட்டார்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார்.