Wednesday, October 31, 2018

விஜய்யின் சர்கார் படத்தில் இடம்பெற்ற மாஸ் பஞ்ச் டயலாக் இதுதான்- தளபதி தெறிக்கவிட போறாரு

எல்லா தடைகளையும் தாண்டி தீபாவளிக்கு சர்கார் படம் மூலம் சரவெடி வெடிக்க வருகிறார் விஜய். முருகதாஸ் எழுதிய கதை என்னுடைய என்று வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார்.

இன்று விசாரணையில் முருகதாஸ்-வருணுடன் சமரசம் பேசியுள்ளதாக செய்திகள் வந்துவிட்டது.

அடுத்து என்ன தளபதி தீபாவளி சரவெடி இருக்கிறது. விஜய் படங்களில் ஏதாவது ஒரு மாஸ் வசனம் இடம்பெறும், ரசிகர்களிடமும் வைரலாகும். அப்படி சர்கார் படத்திலும் மாஸ் வசனங்கள் நிறைய இருக்கிறது.

அதில் ஒன்று துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய I Am Waiting என்ற வசனம் இப்படத்திலும் இடம்பெற்றுள்ளதாம். இதோடு வேறொரு வைரலாகும் வசனங்களும் இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல் வருகின்றன.